“2 மாதங்களுக்கு வங்கிக் கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை”- ரிசர்வ் வங்கி

“2 மாதங்களுக்கு வங்கிக் கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை”- ரிசர்வ் வங்கி

“2 மாதங்களுக்கு வங்கிக் கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை”- ரிசர்வ் வங்கி
Published on

ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கையில் அடுத்த 2 மாதங்களுக்கு மாற்றம் எதுவும் இருக்காது என தெரிவித்துள்ளது. இதன் மூலம் வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வங்கிக் கடன்களுக்கான வட்டி ஏற்கனவே உள்ள அளவிலேயே நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ எனப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி 4% ஆக தொடரும் என மும்பையில் நடைபெற்ற அவ்வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ரிவர்ஸ் ரெப்போ எனப்படும் ரிசர்வ் வங்கியில், வங்கிகள் கொடுத்து வைக்கும் டெபாசிட்டுகளுக்கான வட்டியும் 3.35% ஆகவே நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி தொடர்ந்து 7-ஆவது முறையாக வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com