"2021 பிற்பாதியில் 5ஜி சேவையை ஜியோ வழங்கும்!" - முகேஷ் அம்பானி உறுதி

"2021 பிற்பாதியில் 5ஜி சேவையை ஜியோ வழங்கும்!" - முகேஷ் அம்பானி உறுதி

"2021 பிற்பாதியில் 5ஜி சேவையை ஜியோ வழங்கும்!" - முகேஷ் அம்பானி உறுதி
Published on

இந்தியாவில் 5ஜி சேவையில் புதியதொரு புரட்சியை வரும் 2021 ஆம் ஆண்டின் பிற்பாதியில் படைக்க உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இந்திய மொபைல் மாநாடு 2020 நிகழ்வில் இதனை தெரிவித்துள்ளார்.

“5ஜி சேவையின் வருகை பெரிய அளவிலான தொழிற்புரட்சியை ஏற்படுத்தும். அதன் முன்னோடியாக ஜியோ நிறுவனம் திகழும்.  டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்ட உலகளவிலான சிறந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 5ஜி சேவையை அதிகரிக்கவும், விரைவுபடுத்துவதற்கும் அதை மலிவு மற்றும் எல்லா இடங்களிலும் கிடைக்கச் செய்வதற்கும் கொள்கை அளவிலான நடவடிக்கைகள் தேவை. 

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி நெட்வொர்க் சேவை உள்நாட்டின் ஹார்டுவேர் மற்றும் தொழில்நுட்ப கூறுகளால் இயக்கப்படும். இந்தியாவில் 5ஜி சேவையில் புதியதொரு புரட்சியை வரும் 2021 ஆம் ஆண்டின் பிற்பாதியில் படைக்க உள்ளது. குறிப்பாக, தற்சார்பு இந்தியாவுக்கு ஒரு சான்றாக இது திகழும்” எனவும் அவரது உரையில் தெரிவித்துள்ளார் முகேஷ் அம்பானி. 

இந்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையும், இந்திய செல்போன் நிறுவனங்கள் சங்கமும் இணைந்து இந்தியா மொபைல் மாநாடு 2020-ஐ நடத்துகின்றன. இந்த மாநாடு இன்று முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

'தற்சார்பு இந்தியா,' 'டிஜிட்டல் பங்கேற்புநிலை' மற்றும் 'நீடித்த வளர்ச்சி, தொழில்முனைவோர் முயற்சி & புதுமை சிந்தனை படைப்பு' என்ற தொலைநோக்குத் திட்டங்களுக்கு இசைவான செயல்பாடுகளை உருவாக்குவது இந்த மாநாட்டின் நோக்கம் என்கிறது மத்திய அரசு. தொலைத்தொடர்பு மற்றும் புதிய தொழில்நுட்பத் துறைகளுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

இந்திய செல்போன் தொழில் துறையினரின் இந்த மாநாட்டின் துவக்க உரையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது > அனைத்து கிராமங்களிலும் 3 ஆண்டுகளில் ஹை-ஸ்பீடு இன்டர்நெட்: பிரதமர் மோடி உறுதி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com