98.15 மில்லியன் டாலர்: நியூயார்க்கில் சொகுசு ஹோட்டல் வாங்கும் ரிலையன்ஸ்

98.15 மில்லியன் டாலர்: நியூயார்க்கில் சொகுசு ஹோட்டல் வாங்கும் ரிலையன்ஸ்
98.15 மில்லியன் டாலர்: நியூயார்க்கில் சொகுசு ஹோட்டல் வாங்கும் ரிலையன்ஸ்

நியூயார்க்கில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலின் 73.37 சதவீத பங்குகளை, 98.15 மில்லியன் டாலர் முதலீட்டில் வாங்க உள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டல், அந்நாட்டின் முன்னணி சொகுசு ஹோட்டல்களில் ஒன்றாகும். உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்த ஹோட்டல் 2018ஆம் ஆண்டில் 115 மில்லியன் அமெரிக்க டாலர்களும், 2019இல் 113 மில்லியன் டாலர்களும், 2020இல் 15 மில்லியன் டாலர்களும் வருவாய் ஈட்டியுள்ளது.

இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலின் 73.37 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பங்குகளை 98.15 மில்லியன் டாலர் முதலீட்டில் வாங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com