"பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரிகளை குறையுங்கள்" ரிசர்வ் வங்கி ஆளுநர் வலியுறுத்தல்!

"பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரிகளை குறையுங்கள்" ரிசர்வ் வங்கி ஆளுநர் வலியுறுத்தல்!
"பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரிகளை குறையுங்கள்" ரிசர்வ் வங்கி ஆளுநர் வலியுறுத்தல்!

பெட்ரோல், டீசல் விலையை நியாயமான அளவில் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவற்றின் மீதான மறைமுக வரிகளை குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் 90 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் விலையும், 85 ரூபாய்க்கு மேல் டீசல் விலையும் உள்ளன. சென்னையில் பெட்ரோல் விலை 92.90 ரூபாய், டீசல் 86.31 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் தங்களது வரிகளை குறைக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்கேற்ப சில மாநில அரசுகள் தங்களது வரியை குறைக்கவும் செய்துள்ளன.

இதனிடையே, கடந்த பிப் 3 ஆம் தேதி முதல் பிப் 5 ஆம் தேதி வரை நிதிக் கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் தொடர்பான குறிப்புகளை ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை வெளியிட்டது. அந்த குறிப்புகளில், கூட்டத்தின்போது ரிசர்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் பேசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி "கடந்த டிசம்பர் மாதம் நுகா்வோர் விலை குறையீடு (உணவு, எரிபொருள் தவிர) 5.5 சதவிதம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயா்வு, பெட்ரோல், டீசல் மீது அதிக அளவிலான மறைமுக வரிகள், முக்கிய சரக்கு மற்றும் சேவைகள்; குறிப்பாக போக்குவரத்து மற்றும் சுகாதார சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்க தொடங்கியதே அதற்குக் காரணம்.

பொருளாதாரத்தில் விலை உயா்வால் ஏற்படும் அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு செயல்திறன் மிக்க விநியோக செயல்பாடுகள், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மறைமுக வரிகளை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த முறையில் படிப்படியாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் முக்கியம்" என்று சக்திகாந்த தாஸ் கூறியதாக அந்தக் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com