வெளியானது ‘ரியல்மி வி5’ : விலை, சிறப்பம்சங்கள்..!
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான வி5 மாடல் வெளியிடப்பட்டுள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய மாடலான வி5 ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. வெண்மை, நீளம் மற்றும் சில்வர் நிறத்தில் வெளியாகியிருக்கும் இந்த போன், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படும். 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளேவுடன், இதில் கார்னிங் கொரில்லா பாதுகாப்பு கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. 6ஜிபி அல்லது 8 ஜிபி ரேம் உடன், மிடியாடெக் டைமென்சிடி 720 அக்டோ-கோர் பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரையில் 48 எம்பி பிரைமெரி கேமரா + 8 எம்பி அல்ட்ரா-வொயிட் அங்கிள் + 2 எம்பி மெக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி மொனொகுரோம் என 4 கேமராக்கள் உள்ளன. அத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. நீண்ட நேரம் சார்ஜ் நிற்கக்கூடிய வகையில் 5,000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 5ஜி நெட்வொர்க் கொண்டு இயங்கும் எனவும், ஃபிங்கர் பிரிண்ட் சென்ஸார் இதில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 6 ஜிபி ரேம் என்றால் ரூ.15,000 எனவும், 8 ஜிபி ரேம் என்றால் ரூ.20,400 எனவும் தகவல் வெளியாகியுள்ளது.