வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் இன்று நடைபெற இருக்கும் ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பணவீக்க விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவில் குறைந்துள்ள நிலையில் வட்டி விகிதங்களை குறைக்க உகந்த சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறைந்த பட்சம் 0.25 சதவிகிதம் வட்டிக் குறைப்பு இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கி வட்டிக் குறைக்கும் பட்சத்தில் வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கு வட்டி குறையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.