இரவு பகலாக பழைய ரூ.500, ரூ.1000 எண்ணும் பணி: ரிசர்வ் வங்கி ஆளுநர்

இரவு பகலாக பழைய ரூ.500, ரூ.1000 எண்ணும் பணி: ரிசர்வ் வங்கி ஆளுநர்
இரவு பகலாக பழைய ரூ.500, ரூ.1000 எண்ணும் பணி: ரிசர்வ் வங்கி ஆளுநர்

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை எண்ணும் பணி இரவு பகலாக நடந்து வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.

வீரப்ப மொய்லி தலைமையிலான நிதித்துறைக்கான நாடாளுமன்றக் குழுவின் முன் இத்தகவல்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியதாக அக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக மற்ற விடுமுறைகளை கூட ரத்து செய்துவிட்டு தாள்களை எண்ணும் பணி நடப்பதாக உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். ரூபாய் தாள்களை விரைந்து எண்ண வசதியாக கூடுதல் இயந்திரங்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்த இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட எம்பிக்கள் கலந்துகொண்டனர். இதற்கிடையில் பணமதிப்பு நீக்கம் தொடர்பான தங்கள் அறிக்கை வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும் என எம்பிக்கள் குழு தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com