டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை நினைவகப்படுத்த தடை - ரிசர்வ் வங்கி அதிரடி

டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை நினைவகப்படுத்த தடை - ரிசர்வ் வங்கி அதிரடி
டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை நினைவகப்படுத்த தடை - ரிசர்வ் வங்கி அதிரடி
டெபிட், கிரெடிட் கார்டுகளின் விவரங்களை பணப் பரிமாற்ற நிறுவனங்கள், முகமைகள் பதிவு செய்யக்கூடாது என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவு வருகிற ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இணையதள வணிக நிறுவனங்கள், டெபிட், கிரெடிட் கார்டு வழங்கும் வங்கி மற்றும் நிறுவனங்கள், வாடிக்கையாளரின் பரிவர்த்தனையின்போது கார்டு விவரங்களை பதிவு செய்து அடுத்தடுத்த பரிவர்த்தனையின்போது தானாக பதிவிடும் முறையை கையாள்கின்றன. இது வாடிக்கையாளரின் பரிவர்த்தனையில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, வாடிக்கையாளரின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை பதிவு செய்வதைத் தடை செய்து ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டது.
இந்த விதிமுறை புத்தாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது. அதன்பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனையின்போதும் வாடிக்கையாளர் தனது கார்டின் எண், பெயர், காலாவதி தேதி, சிவிவி ரகசிய எண் ஆகிய விவரங்களை பதிவிட வேண்டியிருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com