வணிகம்
ரூ.10 நாணயம் சட்டப்படி செல்லும்: ரிசர்வ் வங்கி விளக்கம்
ரூ.10 நாணயம் சட்டப்படி செல்லும்: ரிசர்வ் வங்கி விளக்கம்
10 ரூபாய் நாணயம் சட்டப்படி செல்லத்தக்கது என்றும் அதை பொது மக்கள் தயக்கமின்றி தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள பழைய, புதிய 10 ரூபாய் நாணயம் தொடர்ந்து செல்லத்தக்கது என்றும் பரிவர்த்தனைக்கு உட்பட்டது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரமறியாத சிலர் தேவையற்ற சந்தேகங்களை கிளப்பி நாணயப் புழக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது போன்ற தவறான தகவல்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து 10 ரூபாய் நாணயத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.