புதிதாக 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 30ம் தேதி நடைபெற்ற ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் தரப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. வரும் ஜூன் மாத வாக்கில் புதிய 200 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் விடப்பட வாய்ப்புள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த நவம்பர் மாதம் 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து 500 ரூபாய் தாள்களும் புதிய வடிவமைப்புடன் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் வரஉள்ளதாக தெரிகிறது.