\
ரிசர்வ் வங்கிக்கு வயது 82

ரிசர்வ் வங்கிக்கு வயது 82

ரிசர்வ் வங்கிக்கு வயது 82
Published on

இந்தியாவில் ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டு 82 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன‌.

1935ம் ஆண்டு இதே நாளில்தான் ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் தனியார் வங்கியாக கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கி, பின்னர் 1937ல் மும்பைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 5 கோடி ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கியில் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே அரசின் பங்களிப்பாக இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1949ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ம் தேதி ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மத்திய அரசின் வங்கியாகவும், வங்கிகளை முறைப்படுத்தி கட்டுப்படுத்தும் அமைப்பாகவும் ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com