லென்ஸ்கார்ட் நிறுவனத்திலிருந்து விலகும் ரத்தன் டாடா!
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாட்டா லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் செய்த முதலீட்டை பெற்றுக்கொண்டு, அதிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2016இல் பத்து லட்ச ரூபாயை லென்ஸ்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார் ரத்தன் டாடா. இந்நிலையில் தற்போது அதிலிருந்து அவர் விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் முதலீடு செய்துள்ளார் ரத்தன் டாடா. கடந்த 2008 இல் லென்ஸ்கார்ட் நிறுவனம் நிறுவப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 535 கடைகள் இயங்கி வருகின்றன. தற்போது லாபத்துடன் இயங்கி வருகிறது லென்ஸ்கார்ட் நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லென்ஸ்காரட்டில் முதலீடு செய்த தொகையை காட்டிலும் ஐந்து மடங்கு கூடுதலான தொகையுடன் வெளியேறுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
பஞ்சதந்திரம் படத்தில் வரும் வசனம் போல சின்ன கல்லு, பெத்த லாபத்துடன் ரத்தன் டாடா வெளியேறுகிறார்.