அம்பானியை பின்னுக்குத்தள்ளி டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்த அதானி

அம்பானியை பின்னுக்குத்தள்ளி டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்த அதானி
அம்பானியை பின்னுக்குத்தள்ளி டாப் 10 பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்த அதானி
Published on

சர்வதேச அளவில் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்களின் பட்டியலில் இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி, புதுவரவாக, இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி இணைந்துள்ளார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்கள் யார் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

1. எலான் மஸ்க் டெஸ்லா - 273 பில்லியன்

2. ஜெஃப் பெசோஸ் அமேசான் - 188 பில்லியன்


3. பெர்னார்டு அர்னால்ட் எல்.வி.எம்.எச் - 148 பில்லியன்

4. பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் - 133 பில்லியன்


5. வாரன் பஃபெட் பெர்க்ஷயர் ஹாத்வே - 127 பில்லியன்


6. லேரி பேஜ் கூகுள் - 125 பில்லியன்


7. செர்கே பென் கூகுள் - 119 பில்லியன்


8. ஸ்டீவ் பால்மர் முதலீட்டாளர் - 108 பில்லியன்


9. லேரி எலிசான் ஆரக்கிள் - 103 பில்லியன்


10. கெளதம் அதானி அதானி குழுமம் - 100 பில்லியன்


11. முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் -  99 பில்லியன்



இந்தியாவின் மாபெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி இடையே, சர்வதேச பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. BLOOMBERG BILLIONAIRES INDEX தற்போது வெளியிட்டுள்ள, சர்வதேச அளவில் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்களின் பட்டியலில், முதல் முறையாக முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி, டாப் 10பட்டியலில் கெளதம் அம்பானி இடம்பிடித்துள்ளார்.

100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்களின் பட்டியலில் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், 273பில்லியன் டாலர் சொத்துக்களுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார். அமேசான் நிறுவனத் தலைவர் JEFF BEZOS இரண்டாவது இடத்தையும், LVMH உரிமையாளர் BERNARD ARNAULT மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளார்.

இதில் 100பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டிருந்த இந்தியாவின் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 99பில்லியன் டாலராக குறைந்ததால், அவர் 11ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 100பில்லியன் டாலர் சொத்துக்களுடன் கெளதம் அதானி பத்தாவது இடத்தைப் பெற்றுள்ளார். அதாவது, இவரது சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7 லட்சத்து 60 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.



கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வியாபாரம் செய்ய புறப்பட்டவர் தான், இன்று உலகின் டாப் 10பணக்காரர்களில் ஒருவராக வளர்ந்திருக்கிறார். துறைமுகங்கள், சுரங்கங்கள், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கெளதம் அதானி செய்து வரும் தொழில்கள் பரந்து விரிந்து காணப்படுகின்றன. உள்கட்டமைப்பு உள்ளிட்ட தொழில்களில் இருந்து மட்டும் நடப்பு ஆண்டில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 82ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்த்ததன் காரணமாக, அவரது சொத்து மதிப்பு அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com