ஏப்ரல் 29 ஆம்தேதி முதல் பப்ஜி லைட் செயல்படாது - மன்னிப்புக் கோரியது பப்ஜி நிறுவனம்

ஏப்ரல் 29 ஆம்தேதி முதல் பப்ஜி லைட் செயல்படாது - மன்னிப்புக் கோரியது பப்ஜி நிறுவனம்
ஏப்ரல் 29 ஆம்தேதி முதல் பப்ஜி லைட் செயல்படாது - மன்னிப்புக் கோரியது பப்ஜி நிறுவனம்

உலகமெங்கும் வருகின்ற 29 ஆம் தேதி முதல் பப்ஜி லைட் செயல்படாது என பப்ஜி நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பப்ஜி லைட் வருகின்ற 29 ஆம் தேதி முதல் செயல்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பப்ஜி நிறுவனம் கூறியதாவது, “பப்ஜி லைட் கேமை ஆர்வமாக விளையாடும் அதிக எண்ணிக்கையிலான நபர்கள், தொடர்ந்து எங்களுக்கு ஆதரவை தருவார்கள் என்று நம்புகிறோம். கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் நிச்சயம் பப்ஜி லைட் சிறந்த பொழுது போக்காக அம்சமாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.

இந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் பப்ஜி லைட் கேம் வருகின்ற ஏப்ரல் 29 தேதி முதல் செயல்படாது. அதற்காக நாங்கள் வாடிக்கையளர்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறோம். ஆனால் பப்ஜி லைட் பேஸ்புக், தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். வரும் காலத்தில் பப்ஜியின் புதிய வரவுகளை எதிர்பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்திய தகவல் தொழிட் நுட்ப சட்டம் 69 A விதியின் படி பப்ஜி லைட் தடைசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பப்ஜி நிறுவனம், “டென்சென்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை திரும்ப பெற்றுள்ளோம். இந்திய அரசாங்கத்துடன் இணைந்து பேசி, இதற்கான தீர்வு விரைவாக எட்டப்படும்” என்று கூறியுள்ளது.

உலகளவில் 60 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், 5 கோடி வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதனைவிளையாடுகின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை பப்ஜியின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3.3கோடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com