வணிகம்
அதிரவைக்கும் விலை உயர்வு... தக்காளி ரசத்துக்கு குட்பை (வீடியோ)
அதிரவைக்கும் விலை உயர்வு... தக்காளி ரசத்துக்கு குட்பை (வீடியோ)
எட்டாக்கனியாகிவரும் தக்காளி கிலோ 75 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் உணவகங்களில் தக்காளியை குறைத்து சமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறுகிறார்கள். அதே நேரத்தில் தக்காளி இல்லாமல் இல்லத்தரசிகளும் தவித்துவருகிறார்கள்
கடந்த ஆண்டு தமிழகத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்திருந்ததால் விலை குறைந்து தக்காளியை சாலையில் கொட்டிய நிலை இருந்தது. இதனால் பலர் தக்காளியை பயிர்செய்யவில்லை. அதேநேரத்தில் மழையின்மையால் விளைச்சல் குறைந்து வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய தக்காளியும் வரவில்லை. இதனால் விலை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
விலை அதிகம் என்பதால் வாடிக்கையாளர்கள் தக்காளி வாங்க முடியாமல் தவிக்கிறார்கள் என்று கூறும் வியாபாரிகள், அடுத்த சிலவாரங்களில் தக்காளி வரத்து அதிகரித்தால் விலை குறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.