வணிகம்
தக்காளி, வெங்காயம் விலை திடீர் உயர்வு: மக்கள் அவதி
தக்காளி, வெங்காயம் விலை திடீர் உயர்வு: மக்கள் அவதி
தலைநகர் டெல்லியில் தக்காளி, வெங்காயம் விலை திடீரென அதிகரித்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
டெல்லியில் தக்காளி விலை ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக இருந்தது. இந்த விலை திடீரென அதிகரித்து ரூ.65-ல் இருந்து ரூ.80 வரை விற்கப்படுகிறது. இதே போல வெங்காயத்தின் விலை கிலோ ரூ.47-க்கு விற்கப்படுகிறது. பெங்களூர், மிஜோராம் உள்ளிட்டப் பகுதிகளிலும் விலை உயர்ந்துள்ளது. ஆசியாவில் மிகப்பெரிய காய்கறி மற்றும் பழ சந்தையான டெல்லி, ஆசாத்பூர் மண்டியிலும் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
மழை காரணமாக பல பகுதிகளில் இதன் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.