சின்ன வெங்காயத்தில் விலை திடீரென அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.150-க்கு விற்கப்படுகிறது.
மழை காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்தாலும் விலை அதிகமாக இருக்கிறது. இதனால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாமல் இருப்பதாக வெங்காய விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பின்னத்தேவன்பட்டி, சின்னமனூர், கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்ததன் காரணமாக வெங்காயப் பயிர்கள் அழுகி விளைச்சல் மிகவும் குறைந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.
தற்போது வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 150 ரூபாய் வரை விற்பதால், ஓரளவு சமாளிக்க முடிவதாகக் கூறுகின்றனர்.