ஐபிஓ மூலம் ரூ.6,500 கோடி திரட்ட 'பாலிசி பஸார்' திட்டம்

ஐபிஓ மூலம் ரூ.6,500 கோடி திரட்ட 'பாலிசி பஸார்' திட்டம்
ஐபிஓ மூலம் ரூ.6,500 கோடி திரட்ட 'பாலிசி பஸார்' திட்டம்

காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்யும் நிறுவனமான 'பாலிசி பஸார்' நிறுவனம் ஐபிஒ மூலம் ரூ.6500 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. டெக்னாலஜி துறையில் வெளியாகும் ஐந்தாவது ஐபிஓ இது என கணிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் செபியிடம் விண்ணப்பிக்க இருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபிஓ வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை ஐந்தாம் தேதி 'பாலிசி பஸார்' நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஐபிஓ-வுக்கான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் 'ஜொமோட்டோ' ஐபிஓ முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து 'பேடிஎம்', 'மொபிகுவிக்', 'கார் டிரேட்' ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ-வுக்குத் தயராகி வருகின்றன. ஐந்தாவது நிறுவனமாக 'பாலிசி பஸார்' ஐபிஓ வெளியிட இருக்கிறது.

இதுவரை காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசிகளை ஒருங்கிணைக்கும் அக்ரிகேட்டராக இருந்தது. தற்போது இன்ஷூரன்ஸ் புரோக்கிங்-குக்கான அனுமதியை ஐஆர்டிஏ வழங்கி இருக்கிறது. இதன்மூலம் ஆஃப் லைன் மூலமும் காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்யலாம். இந்த அனுமதிக்கு பிறகு 15 இடங்களில் அலுவலகம் அமைத்து காப்பீட்டை விற்பனை செய்ய நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, 100 இடங்கள் வரையும் விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறது.

இந்த ஐபிஓ-வில் ஏற்கெனவே முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கணிசமான அளவுக்கு பங்குகளை விற்பனை செய்வார்கள் எனத் தெரிகிறது. தவிர, புதிய பங்குகளையும் நிறுவனம் வெளியிடும்.

யாஷிஷ் தாகியா, அலோக் பன்சால் மற்றும் அவினாஷ் ஆகிய மூன்று நண்பர்கள் 2008-ம் ஆண்டு இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்கள். இந்த நிறுவனத்தில் இன்ஃபோஎட்ஜ், சாப்ட்பேங்க், ட்ரூ நார்த், பிரேம்ஜி இன்வெஸ்ட், டைகர் குளோபல், டெமாசெக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com