மோடியின் தைரியமான சீர்திருத்தங்கள் இந்தியாவை விரைவாக மீட்கும்: முகேஷ் அம்பானி

மோடியின் தைரியமான சீர்திருத்தங்கள் இந்தியாவை விரைவாக மீட்கும்: முகேஷ் அம்பானி

மோடியின் தைரியமான சீர்திருத்தங்கள் இந்தியாவை விரைவாக மீட்கும்: முகேஷ் அம்பானி
Published on

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட தைரியமான சீர்திருத்தங்கள் இந்தியாவின் விரைவான மீட்புக்கும், அடுத்த ஆண்டுகளில் விரைவான பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்று தான் நம்புகிறேன் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்

பண்டிட் தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகத்தின்  பட்டமளிப்பு விழாவில் பேசிய முகேஷ் அம்பானி "பிரதமர் மோடியின் உணர்வு பூர்வமான மற்றும் ஆற்றல்மிக்க தலைமை உலகத்தை, அமர்ந்து ஒரு புதிய இந்தியா தோன்றுவதை கவனிக்க வைக்கிறது. அவரது நம்பிக்கை முழு நாட்டையும் உற்சாகப்படுத்தியுள்ளது" என்று  கூறினார்.

ஆற்றலின் எதிர்காலம் என்பது "முன்னெப்போதுமில்லாத மாற்றங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றும் அம்பானி கூறினார். பொருளாதார வல்லரசாகவும், பசுமை மற்றும் தூய்மையான ஆற்றல் வல்லரசாகவும் மாறுவதற்காக இரண்டு இலக்குகளை இந்தியா தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 21 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், உலகம் இன்று பயன்படுத்தும் எரிசக்தியின் இரு மடங்கு அளவை பயன்படுத்தும் என்று அம்பானி பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com