தேவைமிகு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளைப் பகிர்வீர்: உலக நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்

தேவைமிகு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளைப் பகிர்வீர்: உலக நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்

தேவைமிகு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளைப் பகிர்வீர்: உலக நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தல்
Published on

கொரோனா தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுக்கு, அவற்றை தாராளமாக பகிர வேண்டும் என உலக நாடுகளுக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.

உலகப் பொருளாதார அமைப்பின் உலகளாவிய வர்த்தக கண்ணோட்டம் குறித்த கூட்டத்தில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு பேசும்போது, "கொரோனா தொற்றை எதிர்த்து இந்தியா தீவிரமாக போராடி வருகிறது. முக்கிய பொருட்களின் கொள்முதல், மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை அரசு அதிகரித்துள்ளது. திரவ ஆக்சிஜன் கொண்டு செல்ல ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை ரயில்வே இயக்குகிறது. தடுப்பூசி போடும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

எங்களது தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், இந்த உலகளாவிய சவாலை சமாளித்து வெளிவருவோம். மீளும் உலகளாவிய விநியோக சங்கிலியில் ஒரு பகுதியாக இருக்க இந்தியா விரும்புகிறது. கொரோனா தொற்றின் முதலாம் அலையின்போதும், சர்வதேச உறுதிகளையும், கடமைகளையும் இந்தியா நிறைவேற்றியது.

இந்த நெருக்கடியில் இருந்து விரைவில் மீள, வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை அம்சங்களுக்கான தளர்வுகளை நாங்கள் ஏற்றுக்கொள்வதோடு மட்டும் அல்லாமல், விரைவான ஒருமித்த கருத்தை உருவாக்குதல், தொழில்நுட்ப பரிமாற்றம், மூலப் பொருட்கள் கிடைக்கும் தன்மை ஆகியவற்றையும் நாங்கள் உறுதிசெய்ய வேண்டும்.

தடுப்பூசி காப்புரிமை விஷயத்தில், அமெரிக்கா குறைந்த அளவிலான ஆதரவை அளித்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இதுதான் இப்போதைய தேவை. தேவைப்படும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை, உலக நாடுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும்" என்றார் பியூஸ் கோயல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com