வணிகம்
மார்பிங் புகைப்படங்களை அடையாளம் காணும் புதிய தொழில்நுட்பம் - பரிசோதிக்கும் அடோப்!!
மார்பிங் புகைப்படங்களை அடையாளம் காணும் புதிய தொழில்நுட்பம் - பரிசோதிக்கும் அடோப்!!
உலகம் முழுவதும் உண்மையான புகைப்படங்களை வைத்துக்கொண்டு பலரும் சித்து விளையாட்டுகளைச் செய்துவருகிறார்கள். செயற்கையாக மார்பிங் செய்யப்படும் படங்களால் பெண்களும் பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு புது தொழில்நுட்பம் உருவாகிவருகிறது.
ஏற்கெனவே எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பரிசோதிக்க அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், தவறான தகவல்களை எளிதில் கண்டுபிடிக்கமுடியும். இந்த ஆண்டுக்குள் அந்தப் புதிய தொழில்நுட்பம் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.