\
சென்னையில் தொடர்ந்து உச்சத்தை தொடும் பெட்ரோல் விலை!

சென்னையில் தொடர்ந்து உச்சத்தை தொடும் பெட்ரோல் விலை!

சென்னையில் தொடர்ந்து உச்சத்தை தொடும் பெட்ரோல் விலை!
Published on

சென்னையில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். 

சென்னையில் பெட்ரோல் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். இன்று (புதன் கிழமை) பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசு உயர்ந்து 88 ரூபாய் 82 காசுக்கு விற்பனையாகிறது.

டீசல் விலை லிட்டருக்கு 24 காசு உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 81 ரூபாய் 71 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டு, மக்கள் நேரடி பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.கொரோனா பொது முடக்க காலத்தில் குறைந்திருந்த எரிபொருள் விலை தற்போது மீண்டும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com