ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.3.91 உயர்வு
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இன்று வரை பெட்ரோலின் விலை ஏறுமுகத்திலேயே உள்ளது. ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோலின் விலை லிட்ருக்கு 3 ரூபாய் 91 காசு உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி 67 ரூபாய் 71 காசாக இருந்த பெட்ரோலின் விலை, அடுத்த 10 நாட்களில் ஒரு ரூபாய் 64 காசு உயர்ந்து. ஆகஸ்ட் 10ஆம் தேதி 69 ரூபாய் 35 காசானது. பெட்ரோலின் விலை தொடர் ஏற்றம் கண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி 70 ரூபாய் 85 காசுக்கு விற்பனையானது. அடுத்தடுத்த நாட்களிலும் பெட்ரோலின் விலை அதிகரித்த நிலையில், ஆகஸ்ட் 25ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 71 ரூபாய் 51 காசுக்கு விற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 71 ரூபாய் 62 காசுக்கு விற்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் முதல் சர்வதேச சந்தை விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் செய்யப்படும் நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.