பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு
Published on

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு 3 ரூபாய் 78 காசும், டீசல் விலை, லிட்டருக்கு 1 ரூபாய் 76 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு உயர்த்தியதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி 27 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி, 21.43 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தில் உயர்ந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com