பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 39 காசும் டீசல், லிட்டருக்கு ஒரு ரூபாய் 4 காசும் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்ப முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன. இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, சென்னையில் 69 ரூபாய் 28 காசாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், தற்போது 71 ரூபாய் 16 காசாக அதிகரித்துள்ளது. 58 ரூபாய் 82 காசாக இருந்த ஒரு லிட்டர் டீசல், தற்போது 60 ரூபாய் 16 காசுக்கு விற்கப்படுகிறது.