பெட்ரோல், டீசல் விலை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 77 காசும் டீசல் விலை 2 ரூபாய் 91 காசும் குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளதும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதும் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்புக்கு காரணமாகும்.
விலைக்குறைப்புக்கு பின் சென்னையில் பெட்ரோல் விலை 69 ரூபாய் 28 காசாகவும் டீசல் விலை 58 ரூபாய் 82 காசாகவும் உள்ளது. கடைசியாக கடந்த நவம்பர் 16-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில் அதற்கு பிறகு தொடர்ந்து அவற்றின் விலை உயர்த்தப்பட்டு வந்தது. தற்போது நான்கரை மாதங்களுக்கு பின் அவற்றின் விலை குறைந்துள்ளது.