அழிவின் விளிம்பில் இயற்கையான வாசனை திரவியம்

அழிவின் விளிம்பில் இயற்கையான வாசனை திரவியம்
அழிவின் விளிம்பில் இயற்கையான வாசனை திரவியம்


இந்தியாவில் இயற்கையாக தயாரிக்கப்படும் வாசனை திரவியங்களுக்கு மக்களிடம் வரவேற்பு இல்லாததால் அத்தொழில் அழிவின் விளிம்பில் சிக்கித் தவித்து வருகிறது என தகவல் வெளிவந்துள்ளது.

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம் கனூஜ் நகரில் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக மலர்களைக் கொண்டு வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்கே தினமும் காலையில் பறிக்கப்படும் மலர்களை நீராவியில் இட்டு காய்ச்சி பின் வாசனை திரவியமாக வடித்தெடுக்கும் பணிகள் காலங்காலமாக நடந்து வருகின்றன. வெறுமனே ஒரு கிலோ வாசனை திரவியத்தை தயாரிக்க நான்கு டன் ரோஜாக்கள் தேவைப்படுகின்றன. அந்தளவுக்கு தரமானது இவை என்பதைவிட இயற்கையானது என்பது முக்கியமான தகவல். இதனால் பக்க விளைவுகள் வருவதில்லை. இந்தியாவின் அடையாளமாக இந்தத் தொழில் இயங்கி வருவது குறிப்பிட வேண்டிய விஷயம்.

இப்போது இந்தப் பாரம்பரிய தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. செயற்கையான வாசனை திரவியங்களின் வரத்தால் இந்தத் தொழில் முடங்கிப் போய் கொண்டிருக்கிறது. சந்தையை செயற்கை பொருட்களே ஆக்கிரமித்துள்ளன. மலிவான விலையில் இவை கிடைப்பதால் மக்களின் கவனம் அதன் மீது திரும்பியுள்ளது. இதனால் இயற்கையான மலர்களை பதனிடும் ஆலைகளின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. தங்களிடம் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு சம்பளம்கூட தர முடியவில்லை என இத் தயாரிப்பில் இயங்கிவருபவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். முதியவர்கள் மட்டுமே தற்சமயம் இத்தொழிலுக்கு வருவதாகவும் இளைய தலைமுறையினர் கனூஜ் நகரைவிட்டு வேறு புதிய தொழிலுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர் என்று தகவல் தருகிறார் அங்குள்ள வாசனை திரவிய உற்பத்தி நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் பாவ் பகத். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com