இந்திய கிரிக்கெட்டின் டைட்டில் ஸ்பான்ஸரில் இருந்து வெளியேறும் பேடிஎம்? என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட்டின் டைட்டில் ஸ்பான்ஸரில் இருந்து வெளியேறும் பேடிஎம்? என்ன காரணம்?
இந்திய கிரிக்கெட்டின் டைட்டில் ஸ்பான்ஸரில் இருந்து வெளியேறும் பேடிஎம்? என்ன காரணம்?

இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளுக்கு செப்டம்பர் 2019 முதல் 2023-ம் ஆண்டு மார்ச் வரை டைட்டில் ஸ்பான்ஸராக பேடிஎம் இருந்து வருகிறது. இந்த நிலையில் தன்னுடைய ஸ்பான்ஸர்ஷிப்பினை மாஸ்டர்கார்டு நிறுவனத்துக்கு மாற்றுமாறு பேடிஎம், பிசிசிஐக்கு கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேடிஎம் நிறுவனத்துக்கும், பிசிசிஐக்கும் இடையே நீண்ட கால உறவு இருப்பதால், பேடிஎம் நிறுவனத்தின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு போட்டிக்கு ரூ.3.80 கோடி என்னும் அளவுக்கு ஏலம் எடுத்திருந்தது பேடிஎம். 2010-ம் ஆண்டு டைட்டில் ஸ்பான்ஸருக்கு பத்து நிறுவனங்கள் போட்டியிட்டன. ஆனால் 2019-ம் ஆண்டு பேடிஎம் மற்றும் மைக்ரோமேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே போட்டியிட்டன. பேடிஎம் நிறுவனத்துக்கு முன்பாக ஒரு போட்டிக்கு ரூ.2.4 கோடி மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டது. பேடிஎம் நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் லாப பாதைக்கு திரும்ப இலக்கு நிர்ணயம் செய்திருப்பதால் செலவுகளை குறைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதற்கு முன்பு இந்தியாவின் ஜெர்ஸி ஸ்பான்ஸராக ஓப்போ இருந்தது. ஆனால் ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்துக்கு முன்பாகவெ ஒப்போ விலகி பைஜூஸ் இணைந்தது. அதேபோல ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸராக விவோ நிறுவனம் இருந்தது. பாதியில் விலகி ஐபிஎல் தொடருக்கு டாடா குழுமம் டைட்டில் ஸ்பான்ஸ்ராக மாறியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com