கூகுளுடன் முற்றியது பகை : தனி ‘அப்ஸ் ஸ்டோர்’ திறக்கும் பேடிஎம்

கூகுளுடன் முற்றியது பகை : தனி ‘அப்ஸ் ஸ்டோர்’ திறக்கும் பேடிஎம்
கூகுளுடன் முற்றியது பகை : தனி ‘அப்ஸ் ஸ்டோர்’ திறக்கும் பேடிஎம்

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் தனியாக அப்ஸ் ஸ்டோர் ஒன்றை திறப்பதாக அறிவித்துள்ளது.

உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி ராக்கெட்டை விட வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அப்ஸ், கேம்ஸ், தொழில்நுட்பம், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றை தொடங்கி வெற்றி காணும் கம்பெனிகள் விரைவாக உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன. எத்தனையோ காலமாக, பல துறைகளில் பணம் சேர்த்த முதலாளிகள் கூட, சட்டென மேல வரும் தொழில்நுட்ப முதலாளிகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இதனால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதிக இடங்களை தொழில்நுட்ப முதலாளிகள் பிடித்துவிடுகின்றனர். அத்துடன் மற்ற முதலாளிகளும் தங்கள் தொழிலையும் தொழில்நுட்பத்திற்கு மாற்றி வருகின்றனர்.

இவ்வாறு தொழில் மாற்றத்தின்போது முதலாளிகளுக்கிடையே ஏற்படும் போட்டிகள், வியாபாரப் பகையாக மாறிவிடுகின்றன. ஒரு நிறுவனத்தை முந்துவதற்கு மற்றொரு நிறுவனம் புதிய யுக்திகளை கையில் எடுக்கின்றன. அந்த வகையில் கூகுள் மற்றும் பேடிஎம் நிறுவனங்களுக்கு இடையே அண்மைக்காலமாக பகை ஏற்பட்டிருக்கிறது. கேம்லிங் நடத்தியதாகவும், தங்கள் விதியை மீறியதாகவும் இந்திய நிறுவனமான பேடிஎம்-ஐ அண்மையில் கூகுள் நிறுவனம் தங்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து தற்காலிகமாக நீக்கியது. பின்னர் மீண்டும் விதிமுறைகளுக்கு உட்பட்டு பேடிஎம் ப்ளே ஸ்டோரில் சேர்க்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த பேடிஎம் கூகுள் நிறுவனத்துக்கு போட்டியாக தாங்களே ஒரு அப்ஸ் ஸ்டோர் தயாரிக்க முடிவு செய்துள்ளது. அதற்கு ‘பேடிஎம் மினி அப் ஸ்டோர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அப்ஸ் ஸ்டோர் வளரும் சாஃப்ட்வெர் டெவலப்பர்களுக்கானது என பேடிஎம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனமான கூகுள், செயலிகளை வைத்திருக்கும் நிறுவனங்களிடம் சுங்கச்சாவடிகள் போல வசூல் வேட்டை நடத்துவதாகவும், அதற்கு மட்டுமே 30% கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் பேடிஎம் குறை கூறியுள்ளது. இதனால் பல டெவலப்பர்கள் தங்களின் செயலிகை பயன்பாட்டாளர்களுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளது.

இதனால் தாங்களே ஒரு அப்ஸ் ஸ்டோரை தயார் செய்வதாகவும், அதில் வரும் 2021ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் செயலிகளை இடம்பெறச் செய்யப்போவதாகவும் பேடிஎம் தெரிவித்துள்ளது. அத்துடன் வளரும் இந்திய டெவலப்பர்களின் செயலிகளுக்கு தாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளது. அதேசமயம் கிழக்கை சேர்ந்த கம்பெனியோ அல்லது மேற்கை சேர்ந்த கம்பெனியோ இந்தியாவை ஒரு இந்தியக் கம்பெனி தான் ஆள வேண்டும் என்று பேடிஎம் கூறியுள்ளது. தங்கள் அப்ஸ் ஸ்டோரை தயாரிக்க ஜப்பான் நிறுவனமான சாஃப்பேங் மற்றும் பிரபல அமெரிக்க நிறுவனமான பெர்க்‌ஷெ ஹாதவே ஆகிய நிறுவனங்களிடம் இருந்து பேடிஎம் கோடிக்கணக்கான நிதியை பெற்றிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com