\
பயணிகள் வாகன விற்பனை நவம்பரில் 19% சரிவு

பயணிகள் வாகன விற்பனை நவம்பரில் 19% சரிவு

பயணிகள் வாகன விற்பனை நவம்பரில் 19% சரிவு
Published on: 

பயணிகள் வாகன விற்பனை சென்ற நவம்பர் மாதத்தில் 19 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக வாகன தயாரிப்பாளர் சங்கமான சியாம் (SIAM) தெரிவித்துள்ளது.

செமிகண்டக்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நிறுவனங்களின் வாகன தயாரிப்பு மற்றும் டீலர்களுக்கான வாகன விநியோக நடவடிக்கைகள் அடுத்தடுத்து பாதித்துள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது. அதனால் வாகன விற்பனை மீண்டும் மந்தநிலைக்கு சென்றதாக சியாம் கூறியுள்ளது. சென்ற நவம்பர் மாதத்தில் வாகன விற்பனை 19 சதவிகிதம் சரிந்து 2,15,626ஆக குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு நவம்பரில் வாகன விற்பனை 2,64,898ஆக இருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com