இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பைக்குகள், ஸ்கூட்டர்கள், கார்கள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களின் விற்பனை 1.11 சதவிகிதம் குறைந்துள்ளது.
கடந்த 8 மாதங்களில், 7 முறை விற்பனை சரிவு கண்டுள்ளதாக வாகன உற்பத்தியாளர் சங்கமான சியாமின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி மாதத்தில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 284 பயணிகள் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் விற்கப்பட்ட 2 லட்சத்து 75 ஆயிரத்து 346 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 1.11 சதவிகிதம் இது குறைவாகும்.
கார் இருசக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விற்பனையும் பிப்ரவரியில் சரிந்துள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த பிப்ரவரியில் 1,79,122 யூனிட்களாக இருந்த கார் விற்பனை இந்த பிப்ரவரியில் 4.33 சதவீதம் குறைந்து ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 372 ஆக உள்ளது.
அதேபோல், இருசக்கர வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டு 16 லட்சத்து 86 ஆயிரத்து 180 ஆக இருந்தது. அது இந்த பிப்ரவரியில் 4.22 சதவீதம் குறைந்து 16 லட்சத்து 15 ஆயிரத்து 71 யூனிட்களாக உள்ளது.
கடந்த ஆண்டு 21 லட்சம் 11 ஆயிரத்து 804 யூனிட்களாக இருந்த வாகனங்களின் பதிவு 3.65 சதவீதம் குறைந்து 20 லட்சத்து 34 ஆயிரத்து 768 ஆக குறைந்துள்ளது.