வணிகம்
“தனிநபர் வாகனங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு” - வாகன உற்பத்தியாளர் சங்கம்
“தனிநபர் வாகனங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு” - வாகன உற்பத்தியாளர் சங்கம்
உள்நாட்டில் வாகன விற்பனையில் மந்தநிலை தொடர்ந்தாலும், ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக வாகன உற்பத்தியாளர் சங்கமான சியாம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில் தனிநபர் வாகனங்கள் ஏற்றுமதி 4 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் 3 லட்சத்து 65 ஆயிரத்து 282 தனிநபர் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதுவே கடந்த ஆண்டின் இதே காலங்களில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 951 தனிநபர் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக சியாம் கூறியுள்ளது. அதேபோல், கார்கள் ஏற்றுமதியும் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை 5 புள்ளி 61 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் வாகனங்களே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.