‘லம்போர்கினி’ கார்களின் 50% விற்பனையை கொடுக்கும் 3 தென்னிந்திய நகரங்கள்

‘லம்போர்கினி’ கார்களின் 50% விற்பனையை கொடுக்கும் 3 தென்னிந்திய நகரங்கள்
‘லம்போர்கினி’ கார்களின் 50% விற்பனையை கொடுக்கும் 3 தென்னிந்திய நகரங்கள்

விலையுயர்ந்த காரான ‘லம்போர்கினி’ காரின் இந்திய விற்பனையில் 50% தென்னிந்தியாவின் மூன்று நகரங்களில் நடைபெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த விலையுயர்ந்த காரான ‘லம்போர்கினி’ இந்தியாவிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தக் காரின் அதிகப்படியான விற்பனை இந்தியாவின் மற்ற அனைத்து நகரங்களையும்விட பெங்களூருவில்தான் அதிகம் நடைபெறுவதாக அந்நிறுவனத்தின் இந்தியத் தலைவர் சரத் அகர்வால் தெரிவித்துள்ளார். ஸ்போர்ட்ஸ் ரக காரான லம்போர்கினியை வாங்க தென்னிந்தியர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் அனைத்து சந்தைகளையும் விட, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னையை சேர்ந்தவர்களே இந்த காரை அதிகம் வாங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதனால் அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் இந்த மூன்று நகரங்களிலும் புதிய கிளைகளை தொடங்கவிருப்பதாகவும் அகர்வால் தெரிவித்தார். டெல்லி மற்றும் மும்பையில் விற்பனை அதிகரிக்கவில்லை என்றாலும், அந்த நகரங்களின் கிளைகளை புதுப்பிக்கவுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் மோட்டார் வாகனங்களின் விற்பனை 20% சரிந்த போதிலும், ‘லம்போர்கினி’ விற்பனை சரிவை சந்திக்கவில்லை என்றும், உயர்வையே சந்தித்ததாகவும் அகர்வால் குறிப்பிட்டார். ஆனால் இந்தியாவில் கடந்த ஆண்டு எத்தனை கார்கள் விற்பனையாகின என்ற தகவலை கூற மறுத்த அவர், இத்தாலியின் தலைமை அலுவலகத்தில் இருந்து விற்பனையான கார்களின் எண்ணிக்கை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என தெரிவித்தார். இந்தியாவில் லம்போர்கினி காரின் விலை ரூ.3.10 கோடி முதல் அடுத்தடுத்த 3 மாடல்களின் விலை ரூ.5.13 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com