ஒப்போ F3 ப்ளஸ் ஸ்மார்ட்போன் 6000 ரூபாய் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த சலுகை இன்று மட்டும் தான் பொருந்தும்.
இந்தாண்டு தொடக்கத்தில் ஒப்போ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் ஒப்போ F3 ப்ளஸ். இதன் விலை ரூ.30,990 ஆகும். இந்நிலையில் ஃப்ளிப்கார்ட்டில் மட்டும் இந்த போன் 6,000 ரூபாய் தள்ளுபடி விலையில் ரூ.24,990-க்கு கிடைக்கிறது. இந்த சலுகை இன்று ஒருநாள் மட்டும் தான் (08-11-2017) பொருந்தும். அதுவும் ஃப்ளிக்காட்டில் பதிவு செய்து வாங்குபவர்களுக்குதான் இந்த சலுகை. மற்ற இணையதளங்களில் பதிவு செய்பவர்களுக்கு இந்தத் தள்ளுபடி கிடையாது.
4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 4000 மில்லி ஆம்பியர் பேட்டரி திறன், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி என பல்வேறு சிறப்பம்சங்களை ஒப்போ F3 ப்ளஸ் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.