ஆன்லைன் விற்பனை
ஆன்லைன் விற்பனைபுதிய தலைமுறை

சூடுபிடிக்கும் ஆன்லைன் வணிக விற்பனை! காரணம் இதுதான்...!

பண்டிகைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆன்லைன் வணிக நிறுவனங்களின் விற்பனை 19 சதவிகிதம் அதிகரித்திருப்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

விழாக்காலங்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை 47,000 கோடி ரூபாய்க்கு ஆன்லைன் நிறுவனங்களில் விற்பனை நடந்துள்ளதாக தனியார் ஆய்வு நிறுவனமான ரெட்சீர் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆய்வு நிறுவனமான ரெட்சீட் தெரிவிக்கையில், “பண்டிகைக்கால விற்பனை தொடங்கிய முதல் வாரத்தில் ஃப்ளிப்கார்ட், மிந்த்ரா மற்றும் ஷாப்சி ஆகிய ஆன்லைன் வணிக நிறுவனங்கள் 29,610 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளன.

அதிக பொருட்களை விற்பனை செய்ததில் ஆன்லைன் வணிக நிறுவனமான மீஷோ இரண்டாம் இடத்தில் உள்ளது. விழாக்கால சிறப்பு விற்பனையில் மொபைல் போன்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

ஆன்லைன் விற்பனை
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக இடம்பிடித்த ஈரோட்டுத் தமிழர்! யார் இந்த கே.பி.ராமசாமி?

முதல்வார விற்பனையில், அதிகவிலை பட்டியலில் உள்ள பொருட்களை 30 சதவிகித வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளனர். கடைசி நாளில் மட்டும் விற்பனை 36 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. மேலும் விழாக்காலங்களின் மீதி நாட்களில் 55 சதவிகித வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வணிக நிறுவனங்களிலேயே பொருட்களை வாங்க திட்டமிட்டிருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com