வணிகம்
“வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது”- மத்திய அமைச்சர் தகவல்
“வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது”- மத்திய அமைச்சர் தகவல்
வெங்காய ஏற்றுமதிக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் அதன் விலை குறையத் தொடங்கி விட்டதாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதும் அதன் கையிருப்புக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதும் நல்ல பலன் தரத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார். விலை குறைவதற்காக விடுவித்த பின்பும் மத்திய அரசு வசம் தற்போதும் 25 ஆயிரம் டன் வெங்காயம் கையிருப்பு இருப்பதாகவும் இதைக்கொண்டு விலையை கட்டுக்குள் வைத்திருக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வெங்காய விலை கடந்த ஒரு வாரத்தில் கிலோவுக்கு 10 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளதாக மொத்த விலை சந்தைகளில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.