இந்தியாவில் அறிமுகமானது ஒன்-மோட்டோவின் ‘எலக்டா’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் உலக அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த சந்தையாக மாறி வருகிறது இந்தியா. அதிகரித்து வரும் எரிபொருள் விலையினால் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருவதுதான் இதற்கு பிரதான காரணம். இத்தகைய சூழலில் ‘எலக்டா’ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது ஒன்-மோட்டோ நிறுவனம்.
Commuta மற்றும் Byka என இரண்டு விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் கடந்த மாதம் இந்திய சந்தையில் என்ட்ரி கொடுத்திருந்தது பிரிட்டிஷ் நாட்டு நிறுவனமான ஒன்-மோட்டோ. இந்த நிலையில் தற்போது மூன்றாவது வாகனத்தையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இதன் சிறப்பம்சங்கள் என்ன?
பழமை மாறாத ஸ்டைலில் புதிய தொழில்நுட்பங்களுடன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது ‘எலக்டா’. ஜியோ ஃபென்சிங், புளூடூத் இணைப்பு, IoT, பராமரிப்பு எச்சரிக்கைகள் (மெயின்டனஸ் அலார்ட்), ரைடிங் Behaviour, இன்னும் பல ஆப்ஷன்கள் இதில் உள்ளன. 45 AH லித்தியம்-ion பேட்டரி (ரிமோவிபிள் பேட்டரி பேக்), 4 kW (5.36 bhp) DC ஹப் மோட்டார் இதில் உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். மணிக்கு அதிகபட்சம் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இதனை ரைட் செய்யலாம். வெறும் நான்கு மணி நேரத்தில் இதன் பேட்டரியை சார்ஜ் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு ‘எலக்டா’ வாகனத்திற்கான முன்பதிவு தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது ஒன்-மோட்டோ இந்தியா. வரும் பிப்ரவரி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 1.99 லட்சமாகும்.