உலகின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகன சார்ஜிங் நெட்வொர்க்கை இந்தியாவில் உருவாக்கும் ஓலா

உலகின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகன சார்ஜிங் நெட்வொர்க்கை இந்தியாவில் உருவாக்கும் ஓலா
உலகின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகன சார்ஜிங் நெட்வொர்க்கை இந்தியாவில் உருவாக்கும் ஓலா

உலகின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகன சார்ஜிங் நெட்வொர்க்கை இந்தியாவில் அமைக்க உள்ளது ஓலா நிறுவனம். சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் உலகெங்கும் மின் வாகனங்கள் புரோமோட் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் இதனை ஓலா தெரிவித்துள்ளது. 

ஓலா ஹைப்பர்சார்ஜர் என்ற பெயரில் இந்த நெட்வொர்க் அமைய உள்ளது. சுமார் 400 நகரங்களில் 1 லட்சம் சார்ஜிங் ஸ்டேஷனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். மேலும் 18 நிமிடத்தில் 50 சதவிகிதம் பேட்டரியை சார்ஜ் செய்யும் திறன் இந்த ஸ்டேஷன்களுக்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் அமைய உள்ளதாம். 

மேலும் இந்த மையங்கள் தானியங்கு முறையில் இயங்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதோடு மல்டி லெவல் பார்க்கிங் மற்றும் சார்ஜிங் வசதிகளும் இதில் இடம்பெற்று இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஓலா நிறுவனத்தின் இணை நிறுவனம் பவிஷ் அகர்வால் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com