24 மணி நேரத்தில் ரூ.600 கோடிக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்து ஓலா அசத்தல்

24 மணி நேரத்தில் ரூ.600 கோடிக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்து ஓலா அசத்தல்

24 மணி நேரத்தில் ரூ.600 கோடிக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்து ஓலா அசத்தல்
Published on

ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 15 அன்று அறிமுகம் செய்தது. S1 மற்றும் S1 புரோ செக்மெண்ட் வாகனங்களை ஓலா அறிமுகம் செய்திருந்தது. அதோடு அதற்கான முன்பதிவையும் தொடங்கியது. தொடர்ந்து தற்போது ஸ்கூட்டர்களை ஆன்லைன் மூலமாக செப்டம்பர் 15 முதல் விற்பனையும் செய்து வருகிறது. இதற்காக தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலை ஒன்றையும் ஓலா நிறுவனம் தொடங்கி உள்ளது. 

இந்நிலையில், முதல் நாள் விற்பனையில் ஓலா அசத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் அதன் நிறுவன தலைவர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். 

“நொடிக்கு நான்கு ஸ்கூட்டர்கள் வீதம் முதல் நாள் விற்பனையில் சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளோம். இன்று நள்ளிரவுடன் அறிமுக விலை மீதான சலுகை நிறைவு பெறுகிறது. அதற்குள்ளாக முன்பதிவு செய்து கொள்ளுங்கள்” என ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார் பவிஷ். 

வரும் அக்டோபர் முதல் அட்வான்ஸ் செலுத்தியவர்களுக்கு வாகனங்களை டெலிவரி செய்ய உள்ளது ஓலா. அதன் விவரங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் ஓலா தெரிவித்துள்ளது. 

‘இந்தியா பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு விடை கொடுத்து விட்டு எலெக்டரிக் வாகனங்களை பயன்படுத்த தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது’ என பவிஷ் சொல்லி இருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com