ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: அனுப்பி வைத்த 4000 ஸ்கூட்டர்களில் 238 மட்டுமே டெலிவரி?

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: அனுப்பி வைத்த 4000 ஸ்கூட்டர்களில் 238 மட்டுமே டெலிவரி?
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: அனுப்பி வைத்த 4000 ஸ்கூட்டர்களில் 238 மட்டுமே டெலிவரி?

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு கூடி வருகிறது. அதையடுத்து பல எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன. அதில் ஓலா நிறுவனமும் ஒன்று. S1, S1 புரோ என இரண்டு மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதத்தில் பர்சேஸ் விண்டோ மூலம் முன்பதிவு செய்யப்பட்ட பயனர்களிடமிருந்து பர்சேஸ் ஆர்டரை பெற்றிருந்தது ஒலா. டிசம்பரில் டெலிவரி எனவும் சொல்லி இருந்தது. அதையடுத்து ஒலா நிறுவனம் தனது தயாரிப்புகளை உற்பத்திக் கூடத்திலிருந்து அனுப்பி வைத்துள்ளது. 

அதில் 4000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடங்கும். ஆனால் கடந்த டிசம்பரில் வெறும் 238 வாகனங்கள் மட்டுமே டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக ‘Vahan’ போர்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுபக்கம் ஓலா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், செப்டம்பர் மாத பர்சேஸ் விண்டோவில் பெற்ற ஆர்டர்களுக்கான வாகனங்களை அனுப்பி உள்ளோம். அதில் சில வாகனங்கள் டிரான்ஸிட்டில் இருக்கும். அது தவிர மற்ற அனைத்தும் டெலிவரி மையங்களில் உள்ளன. சில வாகனங்களுக்கு ஆர்.டி.ஓ பதிவு பணிகளும் நடந்து வருகின்றன” என தெரிவித்திருந்தார். 

தற்போது S1 மற்றும் S1 ப்ரோ என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஒலா விற்பனை செய்து வருகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை முறையே ரூ.99,999 மற்றும் ரூ.1,29,999 என உள்ளது.  

Source : Times Now News

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com