வணிகம்
இருசக்கர வாகன உலகில் ஐந்தே மாதம் தான் - ஹீரோ எலெக்ட்ரிக்கை பின்னுக்கு தள்ளிய ஓலா
இருசக்கர வாகன உலகில் ஐந்தே மாதம் தான் - ஹீரோ எலெக்ட்ரிக்கை பின்னுக்கு தள்ளிய ஓலா
இரு சக்கர எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் நீண்ட காலமாக செயல்பட்டுவந்த ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தை, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பின்னுக்கு தள்ளி இருக்கிறது. செயல்பாட்டினை தொடங்கிய ஐந்து மாதங்களில் ஓலா முதல் இடத்துக்கு வந்திருக்கிறது.
ஏப்ரல் மாதத்தில் ஓலா நிறுவனம் 12,683 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. மாறாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 6,750 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. முதல் இதல் இடத்தை இழந்தது மட்டுமல்லாமல் மூன்றாம் இடத்துக்கு ஹீரோ தள்ளப்பட்டிருக்கிறது. இரண்டாம் இடத்தில் ஒகினவா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் 10,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது.