\
மானியம் இல்லாத சிலிண்டர் விலை உயர்வு

மானியம் இல்லாத சிலிண்டர் விலை உயர்வு

மானியம் இல்லாத சிலிண்டர் விலை உயர்வு
Published on

மானியம் இல்லாத வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ‌ஜனவரி மாதத்தில் 20 ரூபாய் அதிகரித்துள்ளது.

மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 20 ரூபாய் உயர்ந்து 734 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டர் 714 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது 20 ரூபாய் அதிகரித்துள்ளது. தொடர்ந்து 5-ஆவது மாதமாக மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com