ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் ஊதியம், பத்து ஆண்டாக 15 கோடி ரூபாயாகவே உள்ளது.
2017-18ஆம் நிதியாண்டில் முகேஷ் அம்பானிக்கு ஊதியம், ஊக்கச் சலுகைகள் உள்ளிட்டவைகளைச் சேர்த்து 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஊதிய வரம்பை, கடந்த 2009ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியே நிர்ணயித்திருக்கிறார். அதுமுதல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் ஊதியங்கள் உயர்ந்து வரும்போதும் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக முகேஷ் அம்பானி அதே ஊதியத்தையே பெற்று வருகிறார்.
நிறுவனத்தில் முழு நேர இயக்குநர்களாகப் பணியாற்றி வரும் முகேஷ் அம்பானியின் உறவினர்களான நிகில் மேஸ்வானி, ஹிதல் மேஸ்வானி ஆகியோரின் ஊக்கச் சலுகைகள் உள்ளிட்ட ஊதியம் 19 கோடியே 99 லட்சமாக அதிகரித்துள்ளது.