‘கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை’ - ரிசர்வ் வங்கி

‘கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை’ - ரிசர்வ் வங்கி

‘கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை’ - ரிசர்வ் வங்கி
Published on

ரிசர்வ் வங்கியின்‌ நிதிக்கொள்கையில் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரிசர்வ் வங்கியின் மூன்று நாள் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் மும்பையில் நடைபெற்ற நிலையில், குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும், தற்போதுள்ள 5.15 சதவிகிதமே தொடரும் எனவும் அறிவித்துள்ளது. அதேபோல, ரி‌வர்ஸ் ரெப்போ விகிதமும் 4.90 சதவிகிதம் என்ற பழைய நிலையே தொடரும் எனவும் ‌ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய 5 நிதிக்கொள்கைகளில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 1.35 சதவிகிதம் குறைத்து அறிவித்திருந்தது. 

6ஆவது முறையாக இன்றும் கால் சதவிகிதம் வட்டி விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடன் விகிதத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக ரெப்போ விகிதங்களை மாற்‌றாமல் இருப்பதாக தெரிவித்துள்ளது. 2019-20ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார‌ வளர்ச்சி 6.1 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் வட்டி விகிதங்களை குறைக்க இடம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

பணவீக்கம் அதிகரித்து வந்தாலும் நிர்ணயித்த இலக்கிற்குள் இருப்பதாகவே ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே இந்தமுறை வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாததே பொருத்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-20ஆம் நிதியாண்டின் 2ஆவது அரையாண்டில் பணவீக்கம் 5 புள்ளி 1 சதவிகிதத்திலிருந்து 4 புள்ளி 7 சதவிகிதமாகவும், 2021ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பணவீக்கம் 4 சதவிகிதத்திலிருந்து 3 புள்ளி 8 சதவிகிதமாகவும் குறையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com