வணிகம்
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் மாற்றமில்லை
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியில் மாற்றமில்லை
சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் டிசம்பர் மாதம் வரை மாற்றமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பொது சேமநல நிதி, கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ருதி உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி அக்டோபர் முதல் டிசம்பர் வரை இப்போதுள்ள அளவே நீடிக்கும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிபிஎப் திட்டத்துக்கு 7.8 சதவிகிதமும், கிசான் விகாஸ் பத்திரத்துக்கு 7.5 சதவிகிதமும், சுகன்யா சம்ருதிக்கு 8.3 சதவிகிதமும் வட்டி வழங்கப்படுகிறது.