\
"நிறுவனத்தின் கணக்குகளை கடவுள் கூட மாற்ற முடியாது"- இன்ஃபோசிஸ்

"நிறுவனத்தின் கணக்குகளை கடவுள் கூட மாற்ற முடியாது"- இன்ஃபோசிஸ்

"நிறுவனத்தின் கணக்குகளை கடவுள் கூட மாற்ற முடியாது"- இன்ஃபோசிஸ்
Published on: 

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணக்குகளை கடவுள் கூட மாற்ற முடியாது என அந்நிறுவனத் தலைவர் நந்தன் நீல்கேனி தெரிவித்துள்ளார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஒற்றுமையுடன் பணியாற்றும் சிறந்த நிதிக்குழு இருப்பதாகத் தெரிவித்துள்ள நந்தன் நீல்கேனி, நிறுவன அதிகாரிகள் மீது எழுப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளாதாக கூறியுள்ளார். இருப்பினும், அதிகாரிகள் மீதான விசாரணையில் தான் குறுக்கிட விரும்பவில்லை என்றும் விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தங்கள் நிறுவனத்தின் மீதான முறைகேடு குற்றச்சாட்டை வாடிக்கையாளர்கள் நம்பவில்லை என்று தெரிவித்துள்ள நீல்கேனி, வழக்கம்போலவே வர்த்தகம் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.முன்னதாக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் ஆகிய இருவரும் நிறுவனத்தின் குறுகிய கால லாபத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக சில முக்கிய தகவல்களை மறைத்ததாகவும், தவறான தகவல் அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com