ரெப்போ குறைப்பு எதிரொலி : சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

ரெப்போ குறைப்பு எதிரொலி : சென்செக்ஸ், நிஃப்டி சரிவு
ரெப்போ குறைப்பு எதிரொலி : சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைத்த நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவை கண்டுள்ளன.

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை மதிப்பீட்டு குறியீடான சென்செக்ஸ் 433.56 புள்ளிகள் அல்லது 1.17% குறைந்து 37,673.21 புள்ளிகளில் முடிவடைந்தது. 

தேசிய பங்குச் சந்தை மதிப்பீடான நிஃப்டி 139.25 புள்ளிகள் அல்லது 1.2% குறைந்து 11,174.75 புள்ளிகளுடன் 
நிறைவடைந்தது. நிஃப்டியில் ஆட்டோ மொபைல் துறை, ஃபைனான்ஸியல் சர்வீஸ், மெட்டல், பார்சா ஆகிய நிறுவனங்கள் சரிந்தன.

முன்னதாக, வங்கிகளின் குறுகிய காலக் கடன் வட்டி விகிதமான ரெப்போ 5.40 சதவிகிதமாக உள்ள நிலையில், அது 5.15 சதவிகிதமாகக் ரிசர்வ் வங்கி குறைப்பதாக அறிவிப்பு வெளியானது. இதன் எதிரொலியாகவே இந்திய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்திருப்பதாக வர்த்தக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com