டாடா குழும தலைவராக என்.சந்திரசேகரன் இன்று பொறுப்பேற்பு

டாடா குழும தலைவராக என்.சந்திரசேகரன் இன்று பொறுப்பேற்பு

டாடா குழும தலைவராக என்.சந்திரசேகரன் இன்று பொறுப்பேற்பு
Published on

டாடா தொழிற் குழுமத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் இன்று பதவியேற்க உள்ளார்.

டாடா குழும தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்ட நிலையில் அவரது இடத்துக்கு சந்திரசேகரன் கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யங்களில் ஒன்றின் தலைவராக பதவியேற்கும் சந்திரசேகரனின் சொந்த ஊர் நாமக்கல் அருகிலுள்ள மோகனூர் ஆகும். டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ்ஸின் தலைமைப் பொறுப்பையும் சந்திரசேகரன் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com