புதிய SIP மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டு திட்டம்!
எஸ்பிஐ மியூச்சுவல்ஃபண்டு நிறுவனம் மாதம் 250 ரூபாய் செலுத்தும் வகையில் புதிய SIP மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது.
செபி அமைப்பின் தலைவர் மாதபி புரி தலைமையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜன் நிவேஷ் என்ற இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தனது கனவுத்திட்டங்களில் ஒன்று என செபி தலைவர் மாதபி புரி தெரிவித்தார். சொத்து உருவாக்கும் உரிமை இந்தியர்கள் எல்லாரையும் சென்றடைய இத்திட்டம் வெகுவாக உதவும் என்றும் அவர் கூறினார்.
பங்குச்சந்தைகளில் சிறுகச்சிறுக முதலீடு செய்யும் SIP திட்டத்தில் முன்பு குறைந்த பட்ச ஆரம்பத்தொகை 500 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 100 ரூபாய்க்கும் முதலீட்டு திட்டங்களை உருவாக்கியுள்ளன. இந்த வரிசையில் 250 ரூபாய் முதலீட்டுடன் புதிய திட்டத்தை SBI அறிமுகப்படுத்தியுள்ளது. முதுல்முறை மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களை இலக்காக வைத்து இத்திட்டத்தை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது