புதிய ரூ.200 நோட்டுக்கள் - ஏடிஎம்-மில் விநியோகிக்க 3 மாதங்களாகலாம்

புதிய ரூ.200 நோட்டுக்கள் - ஏடிஎம்-மில் விநியோகிக்க 3 மாதங்களாகலாம்

புதிய ரூ.200 நோட்டுக்கள் - ஏடிஎம்-மில் விநியோகிக்க 3 மாதங்களாகலாம்
Published on

புழக்கத்திற்கு வந்துள்ள புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் ஏடிஎம்-மில் விநியோகம் செய்ய சுமார் 3 மாதங்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த மாதத்தில் புதிய 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது. தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட வங்கிகளில் மட்டுமே இந்த நோட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டது.  இந்த புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் ஏ.டி.எம். இயந்திரங்களிலும் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 200 ரூபாய் நோட்டுக்களை ஏ.டிஎம். மையங்களில் விநியோகம் செய்வது தொடர்பாக ஒரு சில வங்கிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், மற்ற சில வங்கிகளிலிருந்து புதிய வடிவிலான 200 ரூபாய் நோட்டுக்களை ஏ.டி.எம். இயந்திர சோதனை செய்ய எந்த உத்தரவும் வரவில்லை என ஏடிஎம் பராமரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், புதிய 200 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைக்க சுமார் 3 மாதங்கள் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com